நாட்டிலுள்ள கீழ் நிலை நீதிமன்றங்களுக்கான 2-வது தேசிய நீதித்துறை ஊதியக் குழு (Second National Judicial Pay Commission-SNJPC) அமைக்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கமிஷனின் தலைவராக உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி J.P.வெங்கட்ராமன் ரெட்டியும், உறுப்பினராக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான R.L.பசந்த் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊதியக் குழுவானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது அமலில் உள்ள நீதித்துறை அலுவலர்களுடைய பணிநிலை மற்றும் ஊதிய அமைப்புகளை மதிப்பீடு செய்யும்.
நாட்டிலுள்ள துணை கீழ்நிலை நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதித்துறை அலுவலர்களின் ஊதிய அமைப்பு மற்றும் பிற சலுகைப்படிகளை நிர்வகிக்கக் கூடிய பொதுக் கொள்கையை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கமாகும்.