மத்திய அரசானது, நீண்டகால உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை நன்கு உறுதி செய்வதற்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தேசிய மரபணு வங்கியை (NGB) நிறுவுவதாக அறிவித்துள்ளது.
புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) தேசிய தாவர மரபணு வள வாரியத்தில் (NBPGR) அமைந்துள்ள முதல் தேசிய மரபணு வங்கியாகும்.
தற்போது இது சுமார் 2,157 இனங்களின் 4,71,561 மதிப்பீடுகளைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய மரபணு வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.