தமிழ்நாடு மாநில அரசானது, திண்டுக்கல்லில் உள்ள காசம்பட்டி (வீரக் கோவில்) புனிதத் தோப்புகளை 2002 ஆம் ஆண்டு உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் கீழ் ஒரு பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரியத் தளமாக (BHS) அறிவித்துள்ளது.
இது 2022 ஆம் ஆண்டில் பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட மதுரையில் உள்ள அரிட்டாபட்டியை அடுத்து, மாநிலத்தின் இரண்டாவது பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளமாகும்.
இது அழகர் மலை காப்புக் காடுகளுக்கு அருகில் சுமார் 4.97 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
48 மர இனங்கள், 22 புதர்ச் செடிகள், 21 படரும் கொடிகள் மற்றும் 29 மூலிகைகள் உள்ளிட்ட பல்லுயிர்த் தொகுப்புகளின் தாயகமாக இந்தத் தோப்பு திகழ்கிறது.