ஸ்வீடனின் பாராளுமன்றமானது 4 மாதகால அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவு கட்டி ஸ்டீபன் லோப்வென்-ஐ இரண்டாவது 4 ஆண்டு கால பதவிகாலத்திற்கு பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த அரசியல் நிலையற்றத் தன்மையானது 2018 செப்டம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பெறாததையடுத்து ஏற்பட்டதாகும்.
தற்பொழுது பெரும்பான்மையில்லாத இந்த அரசை பசுமைக் கட்சி, மத்திய கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் லோப்வென் அமைத்துள்ளார்.
349 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்வீடனின் பாராளுமன்றத்தில் 115 உறுப்பினர்கள் லோப்வென்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 153 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர் மற்றும் 77 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
ஸ்வீடன் நாட்டின் அரசியல் அமைப்பின் கீழ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்கள் (175 உறுப்பினர்கள்) ஒரு தனி நபருக்கு எதிராக வாக்களிக்காத வரை அவர் பிரதமராக இருக்கலாம்.