இரண்டு பறவைகள் சரணாலயங்களுக்கு ராம்சர் குறியீடு
October 3 , 2024
51 days
220
- இராமநாதபுரத்தில் மேலும் இரண்டு பறவைகள் சரணாலயங்களுக்கு ராம்சர் அந்தஸ்து பெற தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்க அமைப்பு முயன்று வருகிறது.
- இராமநாதபுரத்தில் தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை, மேலசெல்வனூர்-கீழசெல்வனூர், கஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகிய ஐந்து பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
- அவற்றில், சித்திரங்குடி மற்றும் கஞ்சிரங்குளம் சரணாலயங்கள் ஆகியவை முறையே 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ராம்சர் அந்தஸ்தைப் பெற்றன.
- தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 18 ராம்சர் தளங்கள் உள்ளது என்ற நிலையில் இது இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.
- தமிழகத்தில் உள்ள ஈரநிலங்கள் அதன் மொத்த புவியியல் பரப்பில் 6.92% ஆகும் என்ற நிலையில் இது 4.86% என்ற தேசிய சராசரியினை விட அதிகமாகும்.
- கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் ஆனது, 2002 ஆம் ஆண்டில் ராம்சார் குறியீட்டினைப் பெற்ற முதல் இடமாகும்.
Post Views:
220