இரண்டு புதிய செயற்கை நுண்திறன் நுண்சில்லுகள் - கூகுள்
July 29 , 2018 2310 days 734 0
இணையதள தேடல் எந்திரமான மாபெரும் கூகுள் (Google) நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அதன் க்ளொவ்டு நெக்ஸ்ட் 2018 (Cloud Next 2018) மாநாட்டில் இரண்டு புதிய செயற்கை நுண்திறன் நுண்சில்லுகளை (Artificial Intelligence (AI) Chip) வெளியிட்டுள்ளது.
அவை Edge TPU மற்றும் Cloud IOT Edge ஆகியன ஆகும்.
இது படிமுறையில் புலனாய்வு இணைக்கப்பட்ட சாதனங்களை மேம்படுத்த மற்றும் வரிசைப்படுத்த நுகர்வோருக்கு உதவும் நோக்கத்தினை கொண்டுள்ளது.
புதிய வன்பொருள் நுண்சில்லான Edge TPU, முனையத்தினில் செயற்கை நுண்திறனை செயல்பட வைப்பதற்கான நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட செயல்பாட்டு தொகுப்பு சுற்று (Application - Specific Integrated Circuit - ASIC) ஆகும்.
இது US பென்னியில் அதுபோன்ற நான்கு நுண்சில்லுகளை பொருத்தக்கூடிய அளவுக்கு சிறிய ஒன்றாகும்.
Cloud IOT Edge, நுழைவுவாயில் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களில் கூகுள் க்ளொவ்டின் சக்தி வாய்ந்த AI-ன் செயல்திறனை நீளச் செய்யும் ஒரு மென்பொருள் அடுக்கு ஆகும்.