TNPSC Thervupettagam

இரண்டு புதிய பாசி வகை ரோஜா இனங்கள்

January 23 , 2019 2005 days 652 0
  • கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தின் பாதாமி மலைகளிலிருந்து இரண்டு புதிய இனங்களை தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த இனங்கள் போர்ட்டுலாகா பாதாமிகா மற்றும் போர்ட்டுலாகா லக்ஷ்மி நரசிம்மஹானியானா எனப் பெயரிடப்பட்டுள்ளன.
  • பாதாமி மலைகளில் கண்டறியப்பட்டதால் போர்ட்டுலாகா பாதாமிகா இனத்திற்கு அப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • தாவர வகைகளை வகைப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை அளித்த பக்சிராஜன் லஷ்மி நரசிம்மனின் பெயர் போர்ட்டுலாகா லக்ஷ்மி நரசிம்மஹானியானா என்ற வகைக்கு இடப்பட்டுள்ளது.
  • IUCN வகைப்பாட்டில் போர்ட்டுலாகா பாதாமிகா தரவு குறைவாக உள்ள பிரிவிலும் போர்ட்டுலாகா லக்ஷ்மி நரசிம்மஹானியானா உயர் அச்சுறு நிலையிலும் வைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்