இரத்த வகைகளுக்கிடையேயான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
February 19 , 2025 3 days 59 0
சென்னையில் உள்ள MIOT இன்டர்நேஷனல் மருத்துவமனையின் மருத்துவர்கள், அரிய பாம்பே இரத்த வகையுடன் கூடிய நோயாளிக்கு குருதிக் கலப்பு கொண்ட ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை செய்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டில், MIOT மருத்துவமனைகளின் குழுவானது, B இரத்தக் வகை கொண்ட ஒரு உறுப்பு தானதாரரிடமிருந்துப் பெற்ற சிறுநீரகத்தினை, O இரத்த வகை கொண்ட ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது.
அவர்கள் ஜப்பானியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இரட்டை வடிகட்டுதல் மூலமான பிளாஸ்மா நீக்கம் (DFPP) எனப்படும் ஒரு சிறப்பு செயல்முறையைப் பயன்படுத்தினர்.
பாம்பே அல்லது HH என்றழைக்கப்படும் இந்த அரிய இரத்த வகையானது, 1952 ஆம் ஆண்டில் மும்பையில் முதன்முதலில் Y.M.பெண்டே என்பவரால் கண்டறியப்பட்டது.
பாம்பே இரத்த வகைக்கும், பொதுவான ABO இரத்தக் வகைகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள் H ஆன்டிஜென் இருப்பது அல்லது இல்லாமை ஆகும்.
இந்த நபர்கள் H ஆன்டிஜெனைக் கொண்ட, இரத்த வகை O உட்பட எந்தவொரு ABO இரத்த வகைகளிலிருந்தும் இரத்த மாற்றத்தினைப் பெற முடியாது.
அவர்கள் மற்றொரு பாம்பே ரத்த வகை கொண்டவரிடமிருந்து மட்டுமே இரத்தத்தைப் பெற முடியும்.
இந்த இரத்த வகையானது மொத்த மனித மக்கள் தொகையில் 0.0004% (4 மில்லியனில் ஒன்று) பேர்களுக்கு உள்ளது.