TNPSC Thervupettagam

இரத்னகிரி - 'பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்'

August 28 , 2024 87 days 143 0
  • மகாராஷ்டிரா மாநில அரசு ரத்னகிரியில் உள்ள கோட்டோவிய வரைபடங்கள் (ஜியோகிளிஃப்ஸ்) மற்றும் பாறை செதுக்குத் தோற்றங்கள் (பெட்ரோகிளிஃப்ஸ்) ஆகியவற்றினை 'பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்' ஆக அறிவித்துள்ளது.
  • இது '1960 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள்’ சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • இரத்னகிரியின் டியூட் எனுமிடத்தில் உள்ள பாறை செதுக்குத் தோற்றங்களின் குழுமம் ஆனது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது ஆகும் (சுமார் 20,000-10,000 ஆண்டுகளுக்கு முந்தையது).
  • புவியியல் வரைபடத் தோற்றங்கள் மற்றும் பாறை செதுக்குத் தோற்றங்கள் பல்வேறு வகையான பண்டைய கலை வடிவங்கள் ஆகும் என்பதோடு இவை இரண்டுமே பூமியின் மேற்பரப்பில் அல்லது பாறை மேற்பரப்பில் உருவங்கள் அல்லது வடிவ அமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்