இரயில்வே கட்டமைப்பிற்கான துல்லிய நேர ஒருங்கிணைப்பு அமைப்பு
August 29 , 2024 89 days 180 0
முதன்முறையாக, இந்திய இரயில்வே நிர்வாகமானது தனது வலையமைப்பு முழுவதும் உள்ள செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளுடன் நேர ஒத்திசைவு மேற்கொள்ளச் செய்வதற்காக ஒரு துல்லிய நேர ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்க உள்ளது.
விபத்தின் போது ஏற்படும் சிரமங்களைத் தொடர்ந்து, இரயில்களின் இயக்கங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளிலும் பயன்பாடுகளிலும் ஒரே சீரான நேரத்தைக் கையாள இது உதவும்.
தற்போதுள்ள அமைப்பின் கீழ், நாடு முழுவதும் உள்ள மண்டல இரயில்வேக்கள் பல்வேறு அமைப்புகளைப் பயன்படுத்துவதோடு, வெவ்வேறு மூலங்களிலிருந்து தனது நேரத்தைப் பெறுகின்றன.
துல்லிய நேர ஒருங்கிணைப்பு அமைப்பிற்கான நேரம் ஆனது இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி அமைப்பு (NAVIC) அல்லது தேசிய இயற்பியல் ஆய்வகங்கள் (NPL) மூலம் பெறப் படும்.