தற்போதைய இந்த மசோதா, 1905 ஆம் ஆண்டு இந்திய இரயில்வே வாரியச் சட்டத்தின் முன்மொழிவுகளை 1989 ஆம் ஆண்டு இரயில்வே சட்டத்தில் இணைப்பதன் மூலம் சட்ட ரீதியிலான கட்டமைப்பை எளிதாக்க முன்மொழிகிறது.
தொடக்கத்தில் இருந்து அத்தகைய அனுமதியின்றிச் செயல்பட்டு வரும் இரயில்வே வாரியத்திற்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மண்டலங்களின் நிதி மற்றும் செயல்பாட்டு ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களை பரவலாக்குவது, வரவு செலவுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் ஆட்சேர்ப்பு ஆகியவற்றை மேலாண்மை செய்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் அளிப்பதை இந்த மசோதா முன்மொழிகிறது.
இது 2014 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் குழு உட்பட பல்வேறு குழுக்களால் ஆதரிக்கப்படுகிறது.
அதிவிரைவு இரயில் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தல்களை துரிதப்படுத்துவதற்கு என்று அரசாங்கத்தை அனுமதிக்கும் 24Aவது பிரிவினை இந்த மசோதா அறிமுகப்படுத்துகிறது.
இந்திய இரயில்வேயினுடைய கட்டணங்கள், பாதுகாப்பு மற்றும் தனியார் துறைப் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மேற்பார்வையிடுவதற்கு இது ஒரு மிகவும் சுதந்திரமானக் கட்டுப்பாட்டு அமைப்பினை நிறுவ உள்ளது.