TNPSC Thervupettagam
September 7 , 2022 813 days 1227 0
  • இந்தியா தனது முதல் இரவு வான் சரணாலயத்தினை ஹன்லே என்னுமிடத்தில் அமைக்க உள்ளது.
  • லடாக் ஒன்றியப் பிரதேச நிர்வாகம், லே நகரில் உள்ள லடாக் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டுச் சபை (LAHDC) மற்றும் இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆகியவற்றுக்கு இடையே ஒரு கரும்பொருள் காப்பகத்தினை நிறுவுவதற்காக ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
  • இது சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும்.
  • ஹன்லே லடாக்கின் குளிர் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளதால் இந்தத் திட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
  • இது எந்த விதமான மனித இடையூறுகளும் இல்லாத பகுதியில் உள்ளது.
  • மேலும், தெளிவான வான் நிலைகள் மற்றும் வறண்ட வானிலை ஆகியவை ஆண்டு முழுவதும் இங்கு காணப்படுகின்றன.
  • இது இந்தியாவில் வானியல் சார்ந்தச் சுற்றுலாவினை மேம்படுத்தும்.
  • இது ஒளியியல், அகச்சிவப்பு மற்றும் காமா-கதிர் தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயரமான தளங்களில் ஒன்றாக இருக்கும்.
  • சரஸ்வதி மலையில் அமைந்த ஒரு உயரமான நிலையமாக ஹன்லே பகுதி ஏற்கனவே ஒரு இந்திய வானியல் ஆய்வகத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்