ஐக்கிய நாடுகளானது இரஷ்ய மொழி தினத்தை அனுசரிக்கின்றது.
இது 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஏற்படுத்தப் பட்டது.
இது அலெக்சாந்தர் புஸ்கின் என்பவரின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப் படுகின்றது.
இவர் ஒரு ரஷ்யக் கவிஞர் ஆவார். இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தையாகக் கருதப் படுகின்றார்.
ஐக்கிய நாடுகள் மொழிகளுக்கான தினங்களானது கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழிக் கலாச்சாரத்தை அனுசரிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மொழிகளுக்கான தினங்களானது இந்த அமைப்பின் 6 அதிகாரப் பூர்வ (அலுவல்) மொழிகளை ஊக்குவிக்கின்றது.
ஆங்கிலம், அரபி, சீனம், ஸ்பானியம், ரஷ்யா மற்றும் பிரெஞ்சு ஆகியவை இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாகும்.