மத்திய கேபினேட் அவையானது (Union Cabinet) இராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை ஐந்தின் (Fifth Schedule to Constitution) கீழ் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அட்டவணை ஐந்தினுடைய சட்டக்கூறுகளின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பயன்களை (protective measures) இராஜஸ்தான் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் பெறுவதற்காக அவர்கள் வாழும் இடங்கள் அட்டவணை 5-ன் கீழ் சேர்க்கப்பட உள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா (Banswara), துங்கார்பூர் (Dungarpur), பிராதாப்கர் (Pratapgarh) ஆகிய மூன்று மாவட்டங்கள் முழுமையும், 9 தாலுக்காகளும் ஒரு மண்டலமும் (one block), ராஜஸ்தானின் சிரோஹி (Sirohi), பாலி(Pali), சித்தோர்கர் (Chittorgarh), உதய்பூர் (Udaipur), ராஜ்சாமண்ட் (Rajsamand), ஆகிய மாவட்டங்களில் 227 கிராமங்களை உள்ளடக்கும் 46 முழு கிராம பஞ்சாயத்துக்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை ஐந்தின் கீழ் சேர்க்கப்பட உள்ள இராஜஸ்தான் மாநிலப் பகுதிகளாகும்.
இந்த புதிய அரசியலமைப்பு உத்தரவின் பிரகடனமானது ராஜஸ்தான் மாநிலத்தின் அட்டவணை பழங்குடியினர் (scheduled tribes -ST) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை ஐந்தின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பயன்களினைப் பெறுவதினை உறுதி செய்யும்.