TNPSC Thervupettagam

இராஜஸ்தான் தினம் – மார்ச் 30

March 31 , 2020 1703 days 492 0
  • இந்த மாநிலம் இதற்கு முன்பு ரஜபுதினம் என்று அழைக்கப் பட்டது.
  • 1949 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று, பிகானிர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு, இராஜஸ்தான் மாநிலம் உருவானது.

தனித்துவம்

  • இது “அரசர்களின் நிலம்” என்று வெகுவாக அறியப்படுகின்றது.
  • இது நிலப்பகுதியின் அடிப்படையில் மிகப்பெரிய மாநிலமாகவும் மக்கட் தொகையைப் பொறுத்த வரையில் ஏழாவது மிகப் பெரிய மாநிலமாகவும் விளங்குகின்றது.
  • பழமையான ஆரவல்லி மலைப்பகுதியில் அமைந்துள்ள இராஜஸ்தானின் ஒரே மலைப் பகுதியான அபு சிகரத்தில் உள்ள சமண புனிதத் தலமான தில்வாரா கோவில் இங்கு அமைந்துள்ளது.
  • இராஜஸ்தான் மாநிலமானது காலி பங்கன் மற்றும் பாலத்தல் ஆகிய இடங்களில் சிந்து சமவெளி நாகரிகத்தின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது.
  • இது பறவை வாழ்விடத்திற்கென்று வெகு சிறப்பாக அறியப்படும் உலகப் பாரம்பரியத் தளமான கேவலாதேவ் தேசியப் பூங்காவைக் கொண்டுள்ளது.
  • இந்த மாநிலமானது சவாய் மாதவ்பூரில் உள்ள ரந்தம்பூர் தேசியப் பூங்கா, ஆல்வாரில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகம் மற்றும் கோட்டாவில் உள்ள முகுந்தரா குன்று புலிகள் காப்பகம் ஆகிய 3 தேசியப் புலிகள் காப்பகங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்