TNPSC Thervupettagam

இராஜஸ்தான் - லோக்தந்திரா சாய்னானி

December 15 , 2017 2408 days 874 0
  • இந்தியாவில் அவசரகால பிரகடனம் அமலில் இருந்த காலமான 1975 - முதல் 1977 வரை சிறையிலடைக்கப்பட்ட அரசியல் கைதிகளை (Political Prisoners) லோக்தந்திரா சாய்னானிகளாக (Lokthanthira Sainani) அங்கீகரிக்க இராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • MISA (Maintanance of Internal Security Act) எனும் உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் மற்றும் DIR (Defence of India) எனும் இந்திய பாதுகாப்பு சட்டம் ஆகியற்றின் கீழ் இராஜஸ்தானின் ஏதேனும் ஒரு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 12,000 ரூபாயும், மாதாந்திர செலவுப் படியாக 1200 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.
  • சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டி இதுவரை நடைமுறையில் இருந்த மிசா(MISA) மற்றும் DIR ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் லோக் தந்திரா சாய்னானி சம்மன் நிதி என பெயர் மாற்றம் செய்துள்ளது.
  • ஆனால் தற்போது, இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து இராஜஸ்தானிய மக்களுக்கும் ஓய்வூதியம் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • இத்தகு மக்கள், ஓய்வூதியம் பெற சிறையின் கண்காணிப்பாளரிடம் சான்று பெறத் தேவையில்லை, சுய சான்றளிப்பு மட்டுமே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்