TNPSC Thervupettagam

இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள்

August 18 , 2019 1807 days 796 0
  • பஜ்ரங் புனியா மற்றும் புகழ்பெற்ற பாரா தடகள வீரர் தீபா மாலிக் ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது, பாரா தடகளப் பதக்கத்தை வென்ற முதலாவது பெண் வீராங்கனையாக தீபா உருவெடுத்துள்ளார்.
  • கடந்த ஆண்டு, இவர் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிக்கு மாறி ஜகர்த்தாவில் ஒரு புதிய ஆசியச் சாதனையைப் படைத்துள்ளார். தொடர்ந்து 3 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (2010, 2014, 2018) பதக்கங்களை வென்ற ஒரே இந்தியப் பெண்மணியாக இவர் உருவடுத்துள்ளார். 
  • 2017 ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் வீரரான தேவேந்திர ஜஹஜ்ஹாரியாவிற்குப் பின்பு புகழ்பெற்ற இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இரண்டாவது பாரா தடகள வீரராக இவர் உருவெடுக்கவிருக்கின்றார்.

இதுபற்றி

  • இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்பது இந்தியாவில் வழங்கப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கான உயரிய விருதாகும்.
  • இது ஒவ்வொரு ஆண்டும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தினால் வழங்கப்படுகின்றது.
  • இந்த விருது ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு வழங்கப்பட  முடியும்.
  • 1992 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வென்ற முதல் வெற்றியாளர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்