TNPSC Thervupettagam

இராணி இரண்டாம் எலிசபெத்

September 12 , 2022 680 days 350 0
  • இராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் தனது 96 வயதில் ஸ்காட்லாந்தின் பால்மோரலில் காலமானார்.
  • இவர் 1952 ஆம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் ஆட்சி செய்தார்.
  • இவர் உலகின் மிக வயதான மன்னர் மற்றும் பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
  • 2015 ஆம் ஆண்டில், இராணி எலிசபெத் தனது முப்பாட்டி இராணி விக்டோரியா அவர்களின் ஆட்சிக் காலத்தினை விஞ்சி, நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டிஷ் மன்னர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • இந்த ஆண்டு, அவர் உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது மன்னர் ஆனார்.
  • இவர் காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும், இங்கிலாந்து தேவாலயத்தின் ஒரு உயர்நிலை ஆளுநராகவும் பணியாற்றினார்.
  • இராணியின் மரணச் சடங்குகள் மற்றும் பிரிட்டிஷ் அரியணையில் சார்லஸ் (73) அவர்களை நியமிப்பதற்கானத் திட்டங்கள் முறையே ஆபரேஷன் இலண்டன் ப்ரிஜ் மற்றும் ஆபரேஷன் ஸ்பிரிங் டைட் என்று பெயரிடப்பட்டுள்ளன.
  • இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக செப்டம்பர் 11 ஆம் தேதியன்று முழு நாளும் அரசத் துக்க நாளாக இந்திய அரசு அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்