TNPSC Thervupettagam

இராணுவ பார்வையாளர்கள் குழுவின் பணித் தலைவர்

July 5 , 2018 2237 days 611 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், உருகுவேயின் இராணுவப் படைத் பெருந்தலைவர் ஜோஸ் எலாடியோ அல்கெய்னை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இராணுவ பார்வையாளர்கள் குழுவின் பணித் தலைவர் மற்றும் தலைமை பார்வையாளராக நியமித்துள்ளார்.
  • சுவீடனின் மேஜர் ஜெனரல் பெர் கஸ்டஃப் லோதினின் இரண்டு வருடப் பணிக்குப் பிறகு ஜோஸ் பதவி ஏற்க உள்ளார்.
  • UNMOGIP (UN Military Observer Group in India & Pakistan) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினால் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது. இது 1949-ல் இருந்து அதன் பணியைத் தொடங்கியது.
  • ஜம்மு & காஷ்மீரில், அணு ஆயுதமுடைய இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போர் நிறுத்த நிலையை கண்காணிப்பது இதன் பணியாக கொடுக்கப்பட்டுள்ளது.
  • UNMOGIP-ல் 44 இராணுவ பார்வையாளர்கள், 10 நாடுகளிலிருந்து 25 சர்வதேச பொது பணியாளர்கள் மற்றும் 47 உள்ளூர் பொது ஊழியர்கள் உள்ளனர்.
  • இந்த குழுவிற்கு ஐக்கிய நாடுகளின் வழக்கமான வரவு செலவு திட்டதால் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்