ஏப்ரல் 3, 2020 அன்று, “சர்வ சாந்து நிர்மயா” என்ற குறிக்கோளின் கீழ் இராணுவ மருத்துவப் படை நிறுவன தினம் கொண்டாடப் பட்டது.
“எல்லா மனிதர்களும் குறைபாடுகள் மற்றும் நோய்களிலிருந்து விடுபடட்டும்” என்பதே “சர்வ சாந்து நிர்மயா” என்பதன் பொருளாகும்.
இராணுவ மருத்துவப் படையின் முக்கிய பங்களிப்பாளராக இந்திய மருத்துவச் சேவை இருந்தது.
இது 1612 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கப்பட்ட போது நிறுவப் பட்டது.
இந்திய மருத்துவச் சேவைகள், இந்திய மருத்துவமனை மற்றும் செவிலியர் படை மற்றும் இந்திய மருத்துவத் துறையை இணைத்து 1943 ஆம் ஆண்டில் இராணுவ மருத்துவப் படைகள் நிறுவப் பட்டன.