TNPSC Thervupettagam

இராணுவ விண்வெளிப் படை - உருவாக்கம்

February 23 , 2019 2007 days 566 0
  • அமெரிக்க அதிபர் விண்வெளிக் கொள்கை ஆணை – 4 இல் (SPD 4/ Space Policy Directive 4) கையெழுத்திட்டுள்ளார். மேலும் அவர் அமெரிக்க இராணுவப் படையின் ஆறாவது பிரிவாக விண்வெளிப் படையை உருவாக்க பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
  • இந்தப் படையானது இராணுவம், கப்பற்படை, விமானப் படை, நீர்மூழ்கிப் படை மற்றும் கடலோரக் காவற் படை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.
  • ஆனால் விண்வெளிப் படையினை உருவாக்குவதற்கு அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும்.
  • பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விண்வெளிப் படையானது, பின்வருவனவற்றின் மீது கவனத்தைச் செலுத்தும்.
    • தேசியப் பாதுகாப்பு , சர்வதேச தகவல் தொடர்பு , கண்காணிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல்.
    • விண்வெளியில் சுதந்திரமாக அணுகுதல் மற்றும் சுதந்திரமாக செயல்படுதல் ஆகியவற்றை உறுதி செய்வது, தோழமை மற்றும் கூட்டுப் படைகளுக்கு அவசியமான திறன்களை அளிப்பது.
    • விண்வெளியானது போருக்கான புதிய களமாக இருக்கக் கூடும். ஆதலால் அமெரிக்கா இராணுவ விண்வெளிப் படையை உருவாக்கிப் போரிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்