TNPSC Thervupettagam

இராணுவ விண்வெளிப் படை

December 25 , 2019 1704 days 514 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின் கீழ் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தில் அமெரிக்க இராணுவ ‘விண்வெளிப் படையை’ அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த விண்வெளிப் படையானது அந்நாட்டில் உள்ள ஆயுதப் படைகளின் ஆறாவது கிளையாக அமைய இருக்கின்றது.
  • இது விமானப் படையின் ஒரு பகுதியாக இருக்கும்.

விண்வெளிப் படை பற்றி

  • ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைப் போலவே விண்வெளியினை ஒரு "போர் நடத்துவதற்கு உகந்த களமாக" மாற்றுவதற்கான முயற்சிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
  • விண்வெளிப் படையின் முக்கியக் குறிக்கோளானது விண்வெளிக் களத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரிவாக்குவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்