அண்மையில் புதுதில்லியில் இராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தலைமையில் இராணுவத் தளபதிகள் மாநாடு (Army Commanders’ Conference) துவங்கியுள்ளது.
இராணுவத் தளபதிகள் மாநாடானது ஆண்டிற்கு இருமுறை (biannually) நடத்தப்படுகின்றது. கூட்டிணைவுக் கலந்தாலோசனை (collegiate deliberations) மூலம் முக்கிய கொள்கை முடிவுகளை வகுப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
ஆறு நாட்கள் நடைபெறுகின்ற இந்த மாநாடானது இராணுவ செயல்பாடுகளில் இந்திய இராணுவத்தின் திட்டமிடல் மற்றும் அமல்பாட்டு செயல் முறைகளுக்கான முக்கிய நிகழ்ச்சியாகும்.
எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தணித்தல், இந்தியாவின் வடக்கு எல்லைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இரயில்வே இருப்புப் பாதைகளை அமைத்தல், இராணுவத் துறைக்கான நிதிநிலை ஒதுக்கீடு, இராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விவகாரங்கள் மீது இம்மாநாட்டில் தளபதிகள் விவாதிக்க உள்ளனர்.