இராணுவப் படைகளுக்கு ஒரு விரிவான திட்டமிடுதலை ஏற்படுத்தவும் பெருகும் பாதுகாப்புச் சவால்களை சமாளித்திட பாதுகாப்புக் கொள்கைகளை வடிவமைத்திடவும் வேண்டி மத்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பாதுகாப்பிற்கான திட்டக்குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரைத் தவிர, இந்த குழு, வெளியுறவுத்துறை செயலாளர், பாதுகாப்பு பணியாளர் குழுக்களின் தலைமைகளுக்கான தலைவர், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை தலைவர்கள், நிதித்துறை (செலவு) செயலாளர் ஆகியோரையும் கொண்டிருக்கும்.
இந்த திட்டக்குழுவின் தலைவர் தேவைக்கேற்றவாறு மற்ற நிபுணர்களோடு கலந்தாலோசித்து செயல்படுவார்.