இராணுவத்தின் கிழக்குத் தலைமையகம் - வில்லியம் கோட்டை
February 8 , 2025 15 days 68 0
கிழக்கு ராணுவப் படைப் பிரிவின் படைத் தலைமையகமான கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டைக்கு விஜய் துர்க் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
மேலும், வில்லியம் கோட்டையில் உள்ள கிச்சனர் இல்லம் மானெக்சா இல்லம் எனவும், முன்னர் செயிண்ட் ஜார்ஜ் நுழைவு வாயில் என்று அழைக்கப்பட்ட தெற்கு வாயில் ஆனது தற்போது சிவாஜி நுழைவு வாயில் எனவும் மறுபெயரிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்து நாட்டின் மூன்றாம் மன்னர் வில்லியமின் பெயரிடப்பட்ட வில்லியம் கோட்டையானது, 1781 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்டது.
விஜய் துர்க் என்ற புதிய பெயர் ஆனது, மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் கடற்கரையில் உள்ள பழமையான கோட்டையிலிருந்து பெறப்பட்டது.
இது சத்ரபதி சிவாஜி அவர்களின் கீழான மராட்டியர்களின் ஒரு கடற்படைத் தளமாகச் செயல்பட்டது.