TNPSC Thervupettagam

இராணுவத்தின் வான் பாதுகாப்பு படை – 25 வது நிறுவன தினம்

January 11 , 2018 2512 days 760 0
  • கடந்த ஜனவரி 10 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் படையின் (Army Air Defence) 25-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
  • பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் 1939-ஆம் ஆண்டு முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட இராணுவ வான் பாதுகாப்புப் படையானது இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்குபெற்றது.
  • இருப்பினும் 1994 ஆம் ஆண்டின் ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து தன்னதிகார அங்கீகாரத்தோடு (Autonomous Status) இராணுவ வான் பாதுகாப்புப் படை செயல்படத் தொடங்கியது.
  • இந்தியாவின் வான் பரப்பை குறிப்பாக 5000 அடிக்கு கீழான வான் பரப்பில், எதிரிகளின் விமானங்களிலிருந்தும், ஏவுகணைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதை பணியாகக் கொண்ட இந்திய இராணுவத்தின் ஒரு துடிப்பான வான் படையே இராணுவ வான் பாதுகாப்புப் படையாகும்.
  • ‘அகாஷே ஷத்ருன் ஆஹி’ (AKASHE SHATRUN JAHI- Kill The Enemy in Sky- எதிரிகளை வான் பரப்பிலே அழித்தல்) என்பதே இதன் மந்திரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்