இரஷ்யா தனது மத்திய மற்றும் கிழக்கு இராணுவ மாகாணங்களில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை இராணுவப் பயிற்சியான வோஸ்டோக் 2018-ஐ (கிழக்கு - 2018) நடத்தவிருக்கிறது.
சாபேட் - 81 க்குப் (மேற்கு 8) பிறகு நடைபெறவிருக்கும் மிகப்பெரிய போர் பயிற்சி இந்த வோஸ்டோக் 2018 ஆகும். 1981-ல் அப்போதைய சோவியத் யூனியன் சாபேட் 81 - ஐ 1,00,000 முதல் 1,50,000 வீரர்களுடன் நடத்தியது.
ரஷ்யாவின் இராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய பிரிவுகளுடன் சீனா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளும் இப்பயிற்சியில் பங்கேற்கவிருக்கின்றன.
மேற்கு நாடுகள் மற்றும் நேட்டோ படைகள் இரஷ்யாவிற்கு எதிராக ஆக்கிரமிப்பு மற்றும் விரோதப் போக்கை கடைபிடித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரஷ்யா இப்போர் பயிற்சியை நடத்தவிருக்கிறது.