நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை (Rest of India) வீழ்த்தி நடப்பாண்டில் ரஞ்சிக் கோப்பையை வென்ற அணியான விதர்பா அணி இரானிக் கோப்பையை வென்று உள்நாட்டுக் கிரிக்கெட் சீசனில் இரண்டாவது பட்டத்தைச் சூடியுள்ளது.
இரானிக் கோப்பை
ரஞ்சிக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியின் வெள்ளி விழா நிறைவைக் குறிக்கும் விதமாக 1959–60 ஆண்டிற்கான கிரிக்கெட் சீசனின் போதுR. இரானி கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.
1928 முதல்1970 வரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (Board of Control for Cricket in India -BCCI) தன்னை இணைத்துக் கொண்டு செயலாற்றிய மறைந்தR. இரானியின் பெயர் கொண்டு இத்தொடர் இரானிக் கோப்பை என அழைக்கப்பட்டது.
இத்தொடரானது, நடப்பாண்டு கிரிக்கெட் சீசனின் இரஞ்சிக் கோப்பையை வென்ற அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.