இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாளப் பிரதமர் P.ஷர்மா ஒளி ஆகியோர் ஒன்றாக இணைந்து இந்தியாவின் அயோத்தி நகருக்கும் நேபாளத்தின் ஜனாக்பூர் நகருக்கும் இடையே நேரடிப் பேருந்துச் சேவையைத் தொடங்கி வைத்துள்ளனர்.
இந்த இரு இடங்களும் இந்து மக்களுக்கு புனித இடங்களாகும். இந்தியா மற்றும் நேபாளத்தில் ஆன்மீக மதச் சுற்றுலாவினை மேம்படுத்துவதற்கான சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் (Swadesh Darshan Scheme) கீழ் இந்தியாவினுடைய இராமாயணம் ஆன்மீகச் சுற்றுலாச் சுற்றின் (Ramayan spiritual tourist Circuit) ஒரு பகுதியாக இந்த நேரடிப் பேருந்துச் சேவை துவங்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள ஜனாக்பூர் நகரமானது இராமரின் மனைவியான சீதையின் பிறப்பிடமாகும். சீதையினுடைய நினைவாக ஜனாக்பூரில் 1910 ஆம் ஆண்டில் ஜானகி கோயில் (Janaki temple) கட்டப்பட்டுள்ளது.
சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் இராமாயணம் ஆன்மீகச் சுற்றுலாச் சுற்றினை மேம்படுத்துவதற்காக மத்திய அரசானது 15 புனிதத் தலங்களினை அடையாளம் கண்டுள்ளது.
அவையாவன.
அயோத்தியா, நந்திகிராமம், ஸ்ரீரிங்வெர்பூர் (Shringverpur) – உத்திரப் பிரதேசம்