CSIR-AMPRI நிறுவனம் ஆனது, போபால் நகரில் "இராஷ்ட்ரிய இந்தி விக்யான் சம்மேளன் 2024" நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.
இது இத்தகைய நான்காவது மாநாடாகும்.
இந்தி மொழியின் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படைப்புகளை இந்தி மொழியில் முன்வைத்து விவாதிப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரவீந்திரநாத் தாகூர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் சந்தோஷ் சௌபே, அவரது இந்தி மொழி இலக்கியப் படைப்பு மற்றும் எழுத்துக்கள் மூலம் அறிவியலுக்கு ஆற்றிய மிகச் சிறப்பானப் பங்களிப்பிற்காக ஆச்சார்யா பிரஃப்புல்ல சந்திர ரே விக்யான் சம்வர்தன் சம்மான் விருதினைப் பெற்றார்.