TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய 'விக்யான் புரஸ்கார்’

September 29 , 2023 297 days 237 0
  • மத்திய அரசானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் புதிய தேசிய விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதற்கு "இராஷ்ட்ரிய 'விக்யான் புரஸ்கார்" (RVP) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த விருதுகள் ஆனது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு வழங்கப் படுகின்றன.
  • இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் மிக உயரிய அங்கீகாரமாக இது திகழ உள்ளது.
  • இது நான்கு பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.
    • 'விக்யான் ரத்னா' - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் மேற் கொள்ளப்படும் வாழ்நாள் சாதனைகள்.
    • 'விக்யான் ஸ்ரீ' - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் மேற் கொள்ளப்படும் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்தல்.
    • 'விக்யான் யுவ-சாந்தி ஸ்வரூப் பட்நாகர்' - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறப்பானப் பங்களிப்பினை ஆற்றிய 45 வயதுக்குட்பட்ட இளம் அறிவியலாளர்களை அங்கீகரித்து ஊக்குவித்தல்.
    • 'விக்யான் குழு' விருது – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறப்பான பங்களிப்பினை ஆற்றிய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அல்லது கண்டுபிடிப்பாளர்களைக் கொண்ட குழுவிற்கு வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்