TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் 2024

August 13 , 2024 102 days 207 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான இராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் (RVP) விருது (முதலாவது) பெற்றவர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த விருதுகள், இந்தியச் சமூகங்கள் அல்லது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் ஆராய்ச்சி, புத்தாக்கம் அல்லது கண்டுபிடிப்பு மூலம் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய நபர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகின்றன.
  • இது சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு உள்ளிட்ட தற்போது வழங்கப்பட்டு வரும் அறிவியல் விருதுகளுக்குப் பதிலாக வழங்கப்பட உள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் ஆற்றப்படும் வாழ்நாள் சாதனைகள் மற்றும் கணிசமானப் பங்களிப்புகளை விக்யான் ரத்னா விருது கௌரவிக்கிறது.
  • விக்யான் ஸ்ரீ விருதானது எந்தவொரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் ஆற்றப்படும் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
  • விக்யான் யுவா-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதானது 45 வயதிற்குட்பட்ட இளம் அறிவியலாளர்களை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
  • மலேரியா ஒட்டுண்ணிகள் குறித்த ஆய்விற்காக G.பத்மநாபன் என்பவருக்கு இந்த ஆண்டிற்கான விஞ்ஞான் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சந்திரயான்-3 திட்டக்குழுவிற்கு 2023 ஆம் ஆண்டில் வெற்றிகரமான அத்திட்டத்தினை செயல்படுத்தியதற்காக விக்யான் குழு விருதினைப் பெற்றது.
  • விக்யான் விருதானது ஸ்ரீ அன்னபூர்ணி சுப்ரமணியம், ஜெயந்த் பால்சந்திர உட்கோன்கர், நபா குமார் மோண்டல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • விவேக் போல்ஷெட்டிவார், உர்பசி சின்ஹா, ராக்ஸி மேத்யூ கோல் ஆகியோருக்கு விக்யான் யுவா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்