கும்பல் கலவரங்கள் மற்றும் கும்பல் கொலைகள் தொடர்பான நிகழ்வுகளை திறம்பட கையாளுவதற்கான வழிமுறைகள் மற்றும் சட்ட நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசாங்கம் இரண்டு உயர் நிலைக் குழுக்களை அமைத்திருக்கிறது.
இந்த இரண்டு குழுக்களில் ஒரு குழுவில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவிற்கு மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவ்பா தலைமை வகிப்பார்.
இந்த நான்கு உறுப்பினர் கொண்ட குழு தனது அறிக்கையினை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிற்கு அளிக்கும்.
அமைச்சரவைக் குழு தனது அறிக்கையினை பிரதம அமைச்சர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிக்கும்.
சமீபத்தில் கும்பல் வன்முறைகள் மற்றும் கும்பல் கொலைகள் தொடர்பாக உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கிய பிறகு இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.