இரு சக்கர வாடகை வாகன சேவைகளுக்குத் தடை எதுவும் இல்லை என்றும், அவை தமிழகத்தில் தொடர்ந்து இயங்கலாம் என்றும் மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
வாடகை அல்லது வணிக நோக்கங்களுக்காக வேண்டி இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான தெளிவான விதிகளை மத்திய அரசு வழங்கவில்லை.
சென்னை உயர் நீதிமன்றம் ஆனது, 2018 ஆம் ஆண்டில் இரு சக்கர வாடகை வாகன சேவைகளுக்குத் தடை விதித்தது, ஆனால் மேல்முறையீடு காரணமாக இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் ரேபிடோ, ஓலா, ஊபர், ஸ்விகி, டன்சோ மற்றும் சோமாட்டோ போன்ற சேவை தளங்களில் பணியாற்றும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர்.