மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரு பெரிய சூரிய ஆற்றல் பூங்காக்களை அமைக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியளிக்க இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மேம்பாட்டு நிறுவனமானது (Indian Renewable Energy Development Agency Limited – IREDA) ரேவா அல்ட்ரா சோலார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
IREDA
மத்திய புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஓர் மினி ரத்னா நிறுவனமே IREDA ஆகும்.
இந்த நிறுவனத்தின் குறிக்கோள் ’‘என்றென்றும் ஆற்றல்“ (Energy Forever) என்பதாகும்.
நாட்டில் புது மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்களோடு தொடர்புடைய திட்டங்களை ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதும், அவற்றை அமைப்பதற்கு நிதியுதவி வழங்குவதும் இதன் நோக்கங்களாகும்.