BeiDOU - 3M1 மற்றும் BeiDOU - 3M2 எனப் பெயரிடப்பட்ட இரு BeiDOU – 3 வரிசை செயற்கைக் கோள்களை லாங் மார்ச் – 3B எனும் ஒரே இராக்கெட் மூலம் தென்மேற்கு சிசுவான் மாகாணத்தின் சிசாங் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து வெற்றிகரமாக சீனா விண்ணில் ஏவியுள்ளது. ஏவப்பட்ட இந்த இரு புதிய செயற்கைக் கோள்களும் சீனாவின் BeiDOU செயற்கைக்கோள் வழிகாட்டு அமைப்பின் (Navigation System) மூன்றாவது கட்டமாகும்.
இந்த வழிகாட்டு அமைப்பானது சீனாவின் பாதை மற்றும் மண்டலத் திட்டத்தில் [BRI – Belt and Road Initiative] இணையும் நாடுகளுக்கு வழிகாட்டு சேவையை அளிக்க உள்ளது. 2022-ல் முழுமையான உலக வழிகாட்டு அமைப்பை உருவாக்குவதற்காக சீனா மேலும் 30 செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்து சொந்த வழிகாட்டு அமைப்பைக் கொண்ட மூன்றாவது நாடாக சீனா உருவாகும்.