சர்வதேச நடுவர் தீர்ப்பாயமான இருதரப்பு சர்வதேச ஒப்பந்த அமைப்பானது (Bilateral International Treaty organization - BIT) சமீபத்தில் இந்தியாவிற்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
இந்தியாவிற்கு எதிரான இந்த மனுக்கள் சைப்ரஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களால் இந்த அமைப்பிற்குக் கொண்டு வரப்பட்டன.
BIT என்பது அந்நிய நேரடி முதலீட்டிற்காக நிறுவப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
இது இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கான விதிகளை அமைக்க இரு நாடுகளையும் அனுமதிக்கின்றது.
இந்த ஒப்பந்தமானது 19 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நட்பு, வர்த்தகம் மற்றும் கண்காணிப்பு ஒப்பந்தத்திற்கு அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம் ஆகும்.
முதல் BIT ஆனது பாகிஸ்தானுக்கும் ஜெர்மனிக்கும் இடையே கையெழுத்தானது.
உள்நாட்டு முதலீட்டாளர்களைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சமமாக நடத்தப்படுவதை BIT உறுதி செய்கின்றது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சாதகமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக BITயில் இந்தியா கையெழுத்திடுவது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
உலகில் உள்ள பெரும்பாலான ஒப்பந்தங்கள் ‘மிகவும் விரும்பப்படும் தேசம்’ என்ற நிலையின் மீது கவனம் செலுத்துகையில், BIT மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சமமாக நடத்துகின்றது.
இந்தியா இதுவரை 75 நாடுகளுடன் BITயில் கையெழுத்திட்டுள்ளது.