இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் அமல்படுத்தப் பட்டு உள்ளது.
இது இரு நாட்டு முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டுப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப் படும் என்பதை உறுதியளிக்கிறது.
இந்தியாவில் பெறப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) சுமார் 3% பங்கைக் கொண்டு UAE ஏழாவது இடத்தில் உள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கையெழுத்தான முந்தைய இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (BIPPA) ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று காலாவதி ஆனது.