TNPSC Thervupettagam

இருதுருவ இந்தியப் பெருங்கடல் அமைப்பு நேர்மறையாக மாற்றம்

August 31 , 2023 324 days 194 0
  • இருதுருவ இந்தியப் பெருங்கடல் (IOD) அமைப்பு குறியீடு ஆனது நேர்மறை வரம்பை தாண்டியுள்ளது என்பதை ஆஸ்திரேலிய நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • இந்தியப் பெருங்கடல் படுகையில் இலங்கையின் தெற்கேக் கடலின் மேற்பரப்பு வெப்ப நிலையானது வெப்பமான நிலையிலிருந்து குளிர்ச்சியான நிலைக்கு மாறுவதை இந்தக் குறியீடு குறிக்கிறது.
  • இந்தப் படுகையின் மேற்குப் பகுதியில் உள்ள வெப்பமானது நேர்மறை இருதுருவ இந்தியப் பெருங்கடல் நிகழ்வாகக் குறிப்பிடப் படுகின்ற நிலையில், அதே சமயம் கிழக்குப் பகுதியில் உள்ள வெப்பமானது எதிர்மறை இருதுருவ இந்தியப் பெருங்கடல் நிகழ்வைக் குறிக்கிறது.
  • ஒரு நேர்மறையான IOD நிகழ்வானது இந்தியாவின் தென்மேற்குப் பருவமழையின் செயல் திறனை உயர்த்தியுள்ளது.
  • ஒரு நேர்மறையான IOD நிகழ்வாக அறிவிக்கப் படுவதற்கு முன் IOD குறியீடு ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்