உலக வங்கியானது, “இந்தியாவின் குளிரூட்டல் தொழில்நுட்பத் துறையில் பருவ நிலைச் சார்ந்த முதலீட்டு வாய்ப்புகள்” என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் 2040 ஆம் ஆண்டில் இருப்பிடக் குளிரூட்டலுக்கானச் சந்தை வாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் 1.5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும்.
2040 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 300 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைக் குறைக்கும் திறனைக் கொண்ட குளிரூட்டல் தொழில்நுட்பத்திற்கான நிலையான செயற்திட்டத்தினை இந்த அறிக்கைப் பரிந்துரைக்கிறது.
இந்தியா ஒவ்வோர் ஆண்டும் அதிகளவு வெப்பநிலையை எதிர் கொண்டு வருகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள், நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 160-200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் அதிகளவு வெப்ப நிலையினால் ஏற்படும் மன அழுத்தத்தினால் ஏற்படும் உற்பத்தித் திறன் குறைவினால் சுமார் 34 மில்லியன் மக்கள் வேலை இழப்பைச் சந்திக்க நேரிடும்.
உணவுப் பாதுகாப்பு ரீதியாக, போக்குவரத்தின் போது உண்டாகும் வெப்பத்தினால் ஏற்படும் உணவு இழப்பு ஆண்டிற்கு 13 பில்லியன் டாலர் என்று உலக வங்கி தெரிவித்து உள்ளது.
கட்டிடக் கட்டுமானம், குளிரூட்டல் தொடர் சங்கிலி அமைப்புகள் மற்றும் குளிர்பதனப் பெட்டிகள் ஆகிய மூன்று முக்கியத் துறைகளில் புதிய முதலீடுகள் செய்வது மூலம் புது டெல்லியின் 2019 ஆம் ஆண்டு இந்தியக் குளிரூட்டல் செயல் திட்டத்தினை (ICAP) ஆதரிப்பதற்கான ஒரு செயற்திட்டத்தினை இந்த அறிக்கை முன்மொழிகிறது.