TNPSC Thervupettagam

இரும்பு அயனி மின்கலன்கள் – IIT M

August 11 , 2019 1806 days 777 0
  • மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக மென் எஃகை நேர்மின்முனையாகப் பயன்படுத்தும் ஒரு மீள்நிரப்பு இரும்பு அயனி (Fe2+ அயனிகள்) மின்கலனை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த இரும்பு அயனி மின்கலன் குறைந்த செலவு கொண்டது. இந்த மின்கலனில் சேமிக்கப்படும் ஆற்றலின் அளவும் அதிகமாகும்.
  • அதிக அளவிலான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு, லித்தியம் அயனி மின்கலன்களைத் தயாரிக்க வேண்டும்.
  • ஆனால் இந்தியாவில் லித்தியம் வளங்கள் இல்லை. சர்வதேச அளவில் லித்தியம் வளங்கள் பற்றாக் குறையாக இருக்கின்றது.
  • எனவே, லித்தியம் போன்ற சாதகமான இயற்பியில்-வேதியியல் பண்புகளைக் கொண்ட இரும்பை மீள்நிரப்பு மின்கலன்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்