TNPSC Thervupettagam

இருவாட்சிப் பறவைகளுக்கான சமூகம் சார்ந்த முன்னெடுப்பு

May 29 , 2023 548 days 288 0
  • காடர் என்ற ஒரு பழங்குடிச் சமூகத்தினை உள்ளடக்கிய ஒரு சமூகம் சார்ந்த பாதுகாப்பு முன்னெடுப்பானது, குறைந்து வரும் இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கையினை மீண்டும் உயர்த்தியுள்ளது.
  • இருவாட்சிப் பறவைகள் கூடுகட்டும் மரங்களின் கண்காணிப்பு திட்டமானது 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இருவாட்சிப் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வததையும் வெகுவாக மறைந்து வரும் அவற்றின் கூடு கட்டும் வாழ்விடங்களை மீட்டு எடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டது.
  • இது வழச்சல் என்ற வனப் பிரிவில் உள்ள ஒரு பழங்குடியினச் சமூகமான காடர்களை உள்ளடக்கியதாகும்.
  • இது தனது வளங்காகாப்புச் செயல்முறைகளுக்காக வேண்டி மேற்குத் தொடர்ச்சி மலை இருவாட்சிப் பறவைகள் அறக்கட்டளையின் தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுள்ளது.
  • தென்னிந்தியாவின் மிகவும் சிறியப் பழங்குடியினரான காடர் இனத்தவர், கேரளாவின் கொச்சிக்கும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கும் இடையே உள்ள மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
  • காடுகளில் வாழ்கின்ற இந்த காடர் இனத்தவர் வேளாண்மையினை மேற்கொள்வது இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்