இறக்குமதி மீதான சார்பை குறைப்பதற்காக கொள்கை முடிவுகளையும் பலதரப்பட்ட இதர விஷயங்களையும் அடையாளம் கண்டிட அமைச்சரவைச் செயலாளர்K. சின்கா தலைமையில் உயர் நிபுணர்குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.
நாட்டிற்குள்ளே தயாரிக்கப்படக் கூடிய பொருட்களை அடையாளம் கண்டு அவற்றின் இறக்குமதியை குறைத்திட இக்குழு பல வழிகளை பரிந்துரைக்கும்.
இந்த நிபுணர் குழு, வர்த்தகத் துறை, தொழிற் கொள்கை மற்றும் மேம்பாடு, வருவாய், திறன் மேம்பாடு, ராணுவ உற்பத்தி, பெட்ரோலியம், எஃகு, மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய துறைகளின் செயலாளர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
சராசரியாக, இந்திய இறக்குமதியின் மதிப்பு வருடத்திற்கு ஏறக்குறைய 450 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
2019-18 நிதியாண்டில் 460 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை 20 சதவிகித அளவிற்கு இறக்குமதியின் மதிப்பு அதிகரித்திருக்கின்றது.