சுமார் 1,36,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன அல்டப்ரா வெள்ளைத் தொண்டையுடைய ரெயில் (Aldabra white-throated rail) பறவையானது இருமுறையாக மீண்டும் பிறப்பெடுத்துள்ளது.
இதனை ஆராய்ச்சியாளர்கள் பன்முறைப் பரிணாமம் என்று பெயரிட்டுள்ளனர்.
இது வெவ்வேறு காலகட்டங்களில் அதே மூதாதையரிலிருந்து அதேபோன்ற அல்லது அதற்கு இணையான உடல் அமைப்புகள் மீண்டும் பரிணாமம் பெறுவதாகும்.
இது இந்தியப் பெருங்கடலின் அல்டப்ரா பவளத் தீவில் வாழும் கோழி அளவிலான ஒரு பறக்க முடியாத பறவையாகும்.
இது மடகாஸ்கரில் மட்டுமே காணப்படுகின்றது. ஆனால் இந்தப் பறவையின் புதை புடிவங்கள் பின்வரும் காலகட்டத்தில் அல்டப்ரா பவளத் தீவில் காணப்பட்டன.
இரண்டு வெவ்வேறு கால கட்டங்கள்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொன்றும் தனியாக பிரிந்த கால கட்டங்கள்.
புதைபடிவ ஆதாரத்துடன் இணைந்து அல்டப்ராவின் தனித்துவ மற்றும் பழமையான தொல்லியல் துறை பதிவுகளானது கடல் மட்டங்களின் மாற்றங்கள் இந்தப் பறவை இனம் அழிந்து போவதற்கும் மற்றும் மறுகுடியேற்ற நிகழ்வுகளுக்கும் காரணமாக இருப்பதைக் காட்டுகின்றது.