TNPSC Thervupettagam

இலகுரக கார்பன் (கரிமப்பொருள்) நுரை

May 21 , 2020 1524 days 619 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இலகுரக கார்பன் நுரையை உருவாக்கியுள்ளார். இது ஈய மின்கலன்களுக்கு மாற்றாகச் செயல்பட இருக்கின்றது.
  • இந்த கார்பன் நுரையானது உருவாக்குவதற்கு எளிதானதாகவும் நச்சு அற்றதாகவும் விலை குறைந்ததாகவும் உள்ளது.
  • இது வெப்ப உமிழ்வைத் தயாரித்தல், விண்வெளியில் மின்காந்த இடையீட்டுப் பாதுகாப்பு அரண் அமைத்தல், ஈய-அமில மின்கலன்களுக்கு மின்முனையாக இருத்தல், ஹைட்ரஜன் சேமிப்பகம் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளில் பயன்படுகின்றது. 
  • இந்த கார்பன் நுரையானது நுண்ணியத் துளைகள் கொண்டதாக உள்ளது.
  • மின்கலன்களில் உள்ள இந்தத் துளைகள் அதன் செயல்படும் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்