“இலக்கத் தகடு நடவடிக்கை” என்ற ஒரு குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு சிறப்பு இயக்கத்தை இந்திய இரயில்வேயின் இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection Force - RPF) தொடங்கியுள்ளது.
இது இரயில்வே வளாகங்கள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், வாகனம் நிறுத்தும் பகுதிகள் மற்றும் வாகனம் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப் பட்டிருக்கும் அனைத்து வாகனங்களையும் கண்டறிந்து, அவற்றைச் சரி பார்க்கத் திட்டமிட்டுள்ளது.
அடையாளம் தெரியாத வாகனங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இரயில்வேயில் பணியாற்றும் இதரப் பணியாளர்களுக்கு ஒரு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதப் படுகின்றது.