TNPSC Thervupettagam

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024

October 15 , 2024 72 days 200 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசானது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது அவரது "வரலாற்று அதிர்ச்சி நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையிலான உணர்ச்சி மிக்க கவிதை வழி உரைநடைக்காக" வழங்கப்பட்டுள்ளது.
  • அவரது மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பான "Human Acts" (2014) இலக்கியத்திற்கான அவரது அணுகுமுறையை எடுத்துரைக்கிறது.
  • இந்தப் புதினம் என்பது 1980 ஆம் ஆண்டின் குவாங்ஜு எழுச்சியின் மீதான உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
  • ஹானின் சிறுகதையான "Europa" (2012) மேலும் அவரது இலக்கியத் திறனை வெளிப் படுத்துகிறது.
  • அவரது "The Vegetarian" (2007) புத்தகமானது 2016 ஆம் ஆண்டில் மேன் புக்கர் சர்வதேசப் பரிசை வென்றது.
  • 1901 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆனது 116 முறை 120 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்