இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை அமுல்படுத்தச் செய்வதையும், இலங்கை நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு “மரியாதை மிக்க மற்றும் கண்ணியமிக்க வாழ்க்கை முறையை” உறுதிப்படுத்துவதையும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
13வது திருத்தம் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட இலங்கைச் சட்டம் ஆகும்.
இது 1987 ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப் பட்டதோடு, இது மாகாண சபைத் தேர்தல்களை மேற்கொள்வதுடன் தொடர்பு உடையது.
ஒன்பது மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வினை உறுதியளிக்கிற இது இன்னும் நிறைவேற்றப் படவில்லை.