மாநிலத்திலுள்ள சிறப்பு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 317.40 கோடி ரூபாய் உதவித் தொகையினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக இத்தொகை ஒதுக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையினை ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கான மாதாந்திர உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் மற்ற உறுப்பினர்களுக்கான உதவித் தொகை 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும் 12 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கான உதவித் தொகை 250 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
இனிமேல் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப் படும்.