TNPSC Thervupettagam

இலங்கை – FATFன் “சாம்பல் நிறப் பட்டியலில் இருந்து நீக்கம்

October 24 , 2019 1766 days 607 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது (FATF - Financial Action Task Force) இலங்கையை அதன் ‘சாம்பல் நிறப் பட்டியலில்’ இருந்து நீக்கியுள்ளது.
  • FATF ஆனது தனது உறுப்பு நாடுகளின் நிதி மோசடி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உறுப்பு நாடுகளின் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தலைத் தடுப்பதற்கான (AML / CFT - Anti-Money Laundering and Countering the Financing of Terrorism) நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கின்றது.
  • FATF என்பது G7 இன் முன்னெடுப்பின் அடிப்படையில் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • பண மோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கான பிற தொடர்புடைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • FATFன் செயலகமானது பாரிஸில் உள்ள OECD இன் (Organisation for Economic Co-operation and Development - பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) தலைமையகத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்